×

அவதூறு வழக்கு: ராஜஸ்தான் முதல்வர் இணைய வழியில் ஆஜர்

புதுடெல்லி: ராஜஸ்தான், சஞ்சீவினி கூட்டுறவு நாணய சங்கத்தில் நடந்த ரூ.900 கோடி ஊழலில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து கெலாட்டுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் கஜேந்திர சிங் செகாவத் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கெலாட்டுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. விசாரணையின் போது முதல்வர் கெலாட் இணைய வழியில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜரான கெலாட்டின் வக்கீல், வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கேட்டார்.இதையடுத்து விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post அவதூறு வழக்கு: ராஜஸ்தான் முதல்வர் இணைய வழியில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Chief Minister ,New Delhi ,Union Minister ,Gajendra Singh Segawat ,Sanjeevini Cooperative Currency Society ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 24 மணி...